நட்பு தேவதைக்கு ஒரு நன்றி மடல்....

மனதை கட்டி வைக்கும் சொற்களுக்கு சொந்தக்காரி நீ.... அழவைக்கவும் அரவணைக்கவும் உன் சொல்லால் மட்டுமே முடியும்.... சிரிக்கவைக்கவும் சிலிர்க்கவைக்கவும் உன் சொல்லுக்கு தெரியும்.. உன்னோடு உறவாடிய நாட்கள் முப்பது தான்.. ஆனால் என் முப்பது வருட நட்பு பட்டியலில் முதலிடம் உனக்கு தான்... உன் நினைவுகள் என்னை புரட்டும் நாட்களில் உன் புடவை தரும் உன் வாசமும் உன் மகளின் நேசமும்... நேரமிருந்தால் பேசும் நட்பு வட்ட கடிகாரத்தை உன் வளைகரம் கொண்டு உடைத்துவிட்டு நேரம் காலம் இல்லாமல் பழகும் புது நட்பு செய்தவளே... உன் பாசமும் உன் கோபமும் உன் பாராட்டும் உன் பரிசுகளும் உன் கிளிப்பேச்சும் உன் பிள்ளைமையும் உன் விரல்பிடித்து சுற்றிய பெங்களூர் வீதிகளும் உன் தட்டில் பகிர்ந்து கொண்ட பானி பூரியும் உன்னோடு எடுத்துக் கொண்ட ஒரு நூறு நிழற்படமும் உன்னோடு ஆடிப்பாடிய இரவுகளும் உன்னோடு உறங்காமல் கண்ட கனவுகளும் உன் புன்னகையும் உன் சிந்தனையும் எனக்காக நீ சிந்திய உன் விழிநீரும் எப்போதும் இருக்கும் என்னுள்ளே என் இறுதிவரை... ஒரேயொரு கோரிக்கை உண்டு நட்பே... ஒருபோதும் விலகாதே... உயிருள்ளவரை.... (என் அன்பு தோழியின் அழகு ...