வரவேற்போம் புத்தாண்டை...
புது விடியல்
புது காற்று
புது சுவாசம்
புது பூமி
புத்தாண்டே வருக!!!
புது கதிர்
புது மழை
புது ஒளி
புது பனி
புத்தாண்டே வருக!!!
புது மலர்
புது கனி
புது துளிர்
புது முகில்
புத்தாண்டே வருக!!!
புது தேடல்
புது பாதை
புது பார்வை
புது பயணம்
புத்தாண்டே வருக!!!
புது நம்பிக்கை
புது வளர்ச்சி
புது வேகம்
புது வெற்றி
புத்தாண்டே தருக!!!
புது ஊக்கம்
புது நோக்கம்
புது ஆக்கம்
புது தாக்கம்
புத்தாண்டே வருக!!!
தரணி செழிக்க
தைமகள் வரவில்
ஜனவரி வேண்டும்...
அன்பும் காதலும்
அகிலம் நிறைக்க
பிப்ரவரி வேண்டும்...
மகளிர் மாண்பை
மறைகள் பேசிட
மார்ச் வேண்டும்...
சித்திரை நிலவு
புத்தொளி வீசிட
ஏப்ரல் வேண்டும்...
உழைப்போர் உள்ளம்
செழித்து நிறைய
மே வேண்டும்...
பிள்ளைகள் இயல்பாய்
பள்ளிக்கு சென்றிட
ஜூன் வேண்டும்...
ஆடி பட்டம்
தேடி விதைத்திட
ஆகஸ்ட் வேண்டும்...
வினைகள் களையும்
விநாயகர் பிறப்பை
போற்றிட
செப்டம்பர் வேண்டும்...
நபிகள் நாயகம் காட்டிய
நல்வழியில் நடைபயில
அக்டோபர் வேண்டும்...
தித்திக்கும் மத்தாப்பாய்
மனங்கள் மகிழ
நவம்பர் வேண்டும்...
இயேசுவின் கருணைமழையால்
இடர்கள் இல்லாத
டிசம்பர் வேண்டும்...
இதயங்களை இணைக்க வரும்
2022...
இன்னல்களை துடைக்க வரும்
2022...
இடர்களை களைய வரும்
2022...
இதம்தரும் நலங்கள் தரும்
2022...
ஈடில்லா மேன்மை தரும்
2022...
இனிய நினைவுகள் தரும்
2022...
இருகரம் கூப்பி வரவேற்போம்
புதிய சிந்தனை, புது வித படைப்பு... மிகச் சிறப்பு...👌👏👏👏👍😍🌷🌼🌹🌺🌻
ReplyDeleteநன்றியும் புத்தாண்டு வாழ்த்தும்
Deleteபுதிய விடியலில்
ReplyDeleteபுத்தாண்டை வரவேற்று
புதிய கவி
அருமை நட்பே💐💐💐💐
நன்றி தோழி.... உன்னால் எல்லாம்...
ReplyDelete