எனக்கானவளுக்கு....

 எனது முதல் மடல் இது....
என்மேல் நீ கொண்ட 
எல்லையில்லா நேசம்
என் வாழ்நாளில் 
நான் பெற்ற பெருவரம்....
பல மைல் தொலைவில்
வாழ்ந்துவந்தாலும் 
நினைத்தவுடன் 
நெஞ்சுக்குள்
பெய்திடும் மாமழை 
உன் அன்பு....
செல்ல மொழிக்கு 
சொந்தக்காரி நீ...
உன் வார்த்தைக்குள் 
வசிக்க பைந்தமிழும் விரும்பும்...
உன்னை பார்த்த 
நாள்முதல் இன்றுவரை
உன் பேச்சொலி 
கேளாத நாள் 
என் நாட்காட்டியில் இல்லை...
வாய்விட்டு சிரிக்கவும்
உடனிருக்கும் உறவும் நீ...
பேச்சிழந்த துயரங்களில்
தோல் கொடுக்கும் உறவும் நீ...
ஈரைந்து மாதங்கள்
பிரிவிற்கு பிறகான
நமது கூடல்....
பிள்ளையை சுமந்து
பெற்றவளின் மகிழ்ச்சிக்கு சமம்...
பெண்பிள்ளை இல்லா
என்குறை நீக்க
உன்னைப்போலவே
அன்பை சுமந்த 
உன் பெண்ணையும் 
தந்தவளே....
உன்னை எனக்காய்
படைத்தளித்த இறைவனுக்கு
ஒரு நூறு நன்றிகள்
நீ பிறந்த நாளில்...
உன்னை செல்லமாய்
சீண்ட எப்போதும்
பிடிக்கும்...
இப்போதும் அதுவே...
எப்போதும் உரைக்கும்
என் வரிகளுடன் 
முடிக்கிறேன்...
என் முப்பதாண்டு 
நட்பு பட்டியலில் 
30 நாட்களில் 
முதலிடம் பெற்றவளே...
எப்பொழுதும்
உடனிறு...
முப்பொழுதும்
சிறந்திடு
சாதனை வானில் 
சிறகை விரி...
உலகை அள....

Comments

  1. All ur lifetime's only friendship in a brief manner...nice... lovely...also join me...☺️😂😍🌹

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. என் இனியவளின் நட்பு நான் பெற்ற வரம். இத்தனை பாசத்திற்கும் தேசத்திற்கும் எத்தனை தகுதி நான் என்பது தெரியவில்லை நட்பே நீ வேண்டும் என்னோடு எந்நாளும் . என்னை எனக்கு அடையாளம் தந்தவள் நீ. உன்னோடு என் பொழுதுகள் அழகானவை
    அர்த்தமுள்ளவை. நல்லவளே உன் வாழ்த்துதலிலும் உடனிருப்பிலும் வளர்கிறேன் தோழியே. நன்றி சொல்லி உன்னிலிருந்து தள்ளி நிற்க விரும்பவில்லை. இந்த பிறந்தநாளை அழகாக்கியவள்.....🌹🌹🌹🌹

    ReplyDelete
    Replies
    1. உன் மொழிக்குள் வாழ எப்போதும் பிடிக்கும்... அழகு வரிகள்

      Delete
  4. Varunani you are the best friend of loga mani .All The Best sister.

    ReplyDelete
    Replies
    1. Yes it's true. She is my special gift. Thankyou

      Delete

Post a Comment

Popular posts from this blog

Gradation in writing task from primary level

My Feedback on CELT programme

My self introduction