Posts

Showing posts from January, 2022

எனக்கானவளுக்கு....

Image
 எனது முதல் மடல் இது.... என்மேல் நீ கொண்ட  எல்லையில்லா நேசம் என் வாழ்நாளில்  நான் பெற்ற பெருவரம்.... பல மைல் தொலைவில் வாழ்ந்துவந்தாலும்  நினைத்தவுடன்  நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை  உன் அன்பு.... செல்ல மொழிக்கு  சொந்தக்காரி நீ... உன் வார்த்தைக்குள்  வசிக்க பைந்தமிழும் விரும்பும்... உன்னை பார்த்த  நாள்முதல் இன்றுவரை உன் பேச்சொலி  கேளாத நாள்  என் நாட்காட்டியில் இல்லை... வாய்விட்டு சிரிக்கவும் உடனிருக்கும் உறவும் நீ... பேச்சிழந்த துயரங்களில் தோல் கொடுக்கும் உறவும் நீ... ஈரைந்து மாதங்கள் பிரிவிற்கு பிறகான நமது கூடல்.... பிள்ளையை சுமந்து பெற்றவளின் மகிழ்ச்சிக்கு சமம்... பெண்பிள்ளை இல்லா என்குறை நீக்க உன்னைப்போலவே அன்பை சுமந்த  உன் பெண்ணையும்  தந்தவளே.... உன்னை எனக்காய் படைத்தளித்த இறைவனுக்கு ஒரு நூறு நன்றிகள் நீ பிறந்த நாளில்... உன்னை செல்லமாய் சீண்ட எப்போதும் பிடிக்கும்... இப்போதும் அதுவே... எப்போதும் உரைக்கும் என் வரிகளுடன்  முடிக்கிறேன்... என் முப்பதாண்டு  நட்பு பட்டியலில்  30 நாட்களில்  முதல...

வரவேற்போம் புத்தாண்டை...

Image
புது விடியல் புது காற்று புது சுவாசம் புது பூமி புத்தாண்டே வருக!!! புது கதிர் புது மழை புது ஒளி புது பனி புத்தாண்டே வருக!!! புது மலர் புது கனி புது துளிர் புது முகில் புத்தாண்டே வருக!!! புது தேடல் புது பாதை புது பார்வை புது பயணம் புத்தாண்டே வருக!!! புது நம்பிக்கை புது வளர்ச்சி புது வேகம் புது வெற்றி புத்தாண்டே தருக!!! புது ஊக்கம் புது நோக்கம் புது ஆக்கம் புது தாக்கம் புத்தாண்டே வருக!!! தரணி செழிக்க  தைமகள் வரவில் ஜனவரி வேண்டும்... அன்பும் காதலும் அகிலம் நிறைக்க பிப்ரவரி வேண்டும்... மகளிர் மாண்பை மறைகள் பேசிட மார்ச் வேண்டும்... சித்திரை நிலவு புத்தொளி வீசிட ஏப்ரல் வேண்டும்... உழைப்போர் உள்ளம் செழித்து நிறைய மே வேண்டும்... பிள்ளைகள் இயல்பாய் பள்ளிக்கு சென்றிட ஜூன் வேண்டும்... ஆடி பட்டம்  தேடி விதைத்திட ஆகஸ்ட் வேண்டும்... வினைகள் களையும் விநாயகர் பிறப்பை  போற்றிட செப்டம்பர் வேண்டும்... நபிகள் நாயகம் காட்டிய நல்வழியில் நடைபயில அக்டோபர் வேண்டும்... தித்திக்கும் மத்தாப்பாய் மனங்கள் மகிழ நவம்பர் வேண்டும்... இயேசுவின் கருணைமழையால் இடர்கள் இல்லாத டிசம்பர் வேண்டும்... இதயங்களை இணைக...